சமன்பாடு (The Equation)

  • Sudarsun S
    Sudarsun S
    காமமில்லா காதல் அன்பானது
    நோக்கமில்லா நட்பு வரமானது
    தேடலில்லா பிறவி கடனானது!
    Feathers Feathers
  • Mukilan Suresh
    Mukilan Suresh
    பொய்யில்லா பெண்மை அழகானது 
    எதிபர்பில்லா உறவு இன்பமானது 
    நோக்கமில்லா வாழ்கை வீணானது !
    Feathers Feathers
  • Sudarsun S
    Sudarsun S
    உயிரில்லா மெய் பிண்டமானது
    மெய்யில்லா சேர்க்கை சாபமானது
    உழைப்பில்லா உயர்வு தானமானது!
    Feathers Feathers
  • Mukilan Suresh
    Mukilan Suresh
    ஆக்கமில்லா கனவு சொர்வானது 
    கனவில்லா உள்ளம் வஞ்சகமானது 
    உணர்வில்லா உயிர் இழிவானது !
    Feathers Feathers
  • Sudarsun S
    Sudarsun S
    கருத்தில்லா வாக்கு குப்பையானது
    மருந்தல்லா உணவு பிணியானது
    விருந்தில்லா விழா விரயமானது!
    Feathers Feathers
  • Mukilan Suresh
    Mukilan Suresh
    பொருளில்லா வாதம் வினையானது 
    குணமில்லா மருந்து மண்ணானது 
    பயனில்லா சிகிச்சை சிக்கலானது !
    Feathers Feathers
  • Sudarsun S
    Sudarsun S
    சீற்றமில்லா சிந்தை சுகமானது
    ஏற்றமில்லா செயல்கள் கனிவானது
    மாற்றமில்லா மனம் மகிமையானது
    Feathers Feathers
  • Mukilan Suresh
    Mukilan Suresh
    ஏமாற்றமில்லா  எண்ணம் உயர்வானது 
    போரில்லா  உலகம் அமைதியானது  
    ஆசையில்லா உள்ளம் தூய்மையானது !
    Feathers Feathers
  • Sudarsun S
    Sudarsun S
    கல்வியில்லா இளமை சோகமானது
    கேள்வியில்லா வாழ்க்கை கேலியானது
    தோல்வியில்லா வெற்றி துன்பமானது
    Feathers Feathers

Duel In Progress

  • இனிமையான வாழ்வு

    Sudarsun S Vs. Prathik Murali
    • Sudarsun S
      Sudarsun S
      வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
      வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
      மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
      வாழ்வியில் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!
      Feathers Feathers
      2